கனவு ep 1
ஒரு நல்ல காலை பொழுது ஒருவன் தனது வீட்டில் படுக்கையில் படுத்து கொண்டு இருக்கிறான் திடீரென தூக்கத்திலிருந்து விழித்து ஒரு பேப்பர் மற்றும் பேனாவைத் தேடுகிறான் அவசரஅவசரமாக தேடுகிறான் பேப்பர் கிடைத்துவிட்டது ஆனால் பேனா கிடைக்கவில்லை வேகமாக தேடுகிறான் இறுதியில் ஒரு பேனா கிடைக்கிறது அதை வைத்து வேகமாக எழுத ஆரம்பிக்கின்றான் ஆனால் அந்தப் பேனா எழுதவில்லை உடனே அந்த பேனாவை தூக்கி எறிந்துவிட்டு வேறு பேனாவைத் தேடுகிறான் கிடைக்கவில்லை இறுதியாக ஒரு பென்சில் கிடைக்கிறது அதை வைத்து அந்த பேப்பரில் ஏதோ எழுதுகிறான் இதை ஏன் என்ன எழுதுகிறான் என்பதை நீங்களே அறிந்திருப்பீர்கள் ஆம் இவன் அவனுடைய கனவை தான் எழுதுகிறான் எதற்கு எழுதுகிறான் என்பதை அவனே கூறுவான்
நான் எதற்கு என் கனவுகளை எழுதுகிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் என்னுடைய கடந்த காலத்தை பற்றிய சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இன்றிலிருந்து 11 வருடத்திற்கு முன்பு நான் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தேன் அங்கதான் அவளைப் பார்த்தேன் அவளை நான் கடந்த இரண்டு வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் இதுவரை நான் அவளோடுபேசியதில்லை அவளுக்கு அருகில் நான் சென்றதில்லை அவளை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்தேன் வேறு எதுவும் செய்யவில்லை செய்யவும் பிடிக்கவில்லை இது காதல் அல்ல கிராஸ் அல்ல நட்பும் அல்ல ஏதோ புதிதாக ஒன்று என்னால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை உணர மட்டும் தான் முடிந்தது நான் அவள் பின்னாலேயே சென்று அவளை கவர எந்த ஒரு செயலும் செய்ததில்லை காரணம் நான் அவளை காதலிக்கவில்லை ஏதோ ஒன்று அது என்னவென்று எனக்கு புரியவில்லை நான் எப்பொழுதும் போல சந்தோஷமாக தான் இருந்தேன் தற்போதும் இருந்து கொண்டிருக்கிறது அவன் என்னுடைய அவ என்னுடைய வகுப்பு அல்ல என்னைவிட ஒரு வயது சரி அவன் அவள் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாள் என்னால் அவளை பார்க்க முடியாது ஒருவேளை அவள் என்னுடைய வகுப்பில் இருந்திருந்தாலும் என்னால் பேசியிருக்க முடியாது காரணம் ஆண்கள் பெண்களோடு பேச கூடாது என்ற சொல்லப்படாத விதி எங்களுடைய பள்ளிகளில் உள்ளது எப்பொழுதாவது வீட்டிற்கு செல்லும்போது மதிய உணவு இடைவெளியிலும் மட்டுமே நான் அவளை பார்த்து வந்தேன் நான் பார்ப்பது அவளுக்கு தெரியாது ஆனால் என்னுடைய வகுப்பில் படிக்கும் என்னுடைய நண்பர்களுக்கு எல்லோருக்கும் தெரியும் நான் பார்ப்பது அவளுக்கு தெரியாது என் நான் யார் என்றே அவளுக்குத் தெரியாது அவளோடு எனக்கு நடந்த சில அற்புதமான நிகழ்வுகளை நான் உங்களிடம் பகிர இருக்கின்றேன் பிறகு நான் ஏன் என்னுடைய கனவுகளை எழுதுகிறேன் என்பதையும் கூறுகிறேன்